Register Form

Start your search for a perfect partner

Welcome to Kongu Marriage

கொங்கு திருமண தகவல் மைய செயல்பாடுகள்

கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம் சார்பில் கொங்கு சமுதாய மக்கள் தங்களது மகன்/மகள் ஆகியோர் ஜாதகத்தை பதிவு செய்து தேர்வு செய்திட உதவியாக 20-11-1994 கொங்கு திருமண தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இதுவரை சங்கத்தில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட ஜாதகங்கள் பதிவு செய்யப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

KonguMarriage.com

கொங்கு திருமண தகவல் மையத்தினால் உலகெங்கும் உள்ள கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெற வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்து தான் www.kongumarriage.com என்ற இவ் இணையதளம்.

கொங்கு வேளாளர் இளைஞர் சங்க வரலாறும், செயல்பாடுகளும்

இந்திய துணைக் கண்டத்தில் உள்ள செந்தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் மக்களில் மிகப் பெரிய சமுதாயங்களில் ஒன்று கொங்கு வேளாளர் சமுதாயம். இந்த மக்கள் மண்ணின் மூத்த குடிமக்கள். கடின உழைப்பிற்கும், அறிவுக்கூர்மைக்கும், நேர்மைக்கும், விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்றவர்கள். உழுதுண்டு வாழ்ந்து மற்றெல்லாரையும் தொழுதுண்டு பின்வரச்செய்து கொண்டிருந்த இந்தச்சமுதாயம் இன்றைய காலக்கட்டத்தில் விவசாயம் தங்களைக்காப்பாற்றாது என்று துணிந்து கிராமங்களை விட்டு வெளியேறி நகர்ப் புறங்களில் தொழில் துறையிலும், கணினி துறைகளிலும் மற்றும் அரசு உயர் பதவிகளிலும் முன்னேறி தன்னிகரற்று விளங்குகிறார்கள்.

இச்சமுதாயத்தின் தனித்தன்மை காக்கவும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளவும், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு கல்வி பயில உதவி செய்திடவும், கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றுதிரண்டு கூடிட திருமண மண்டபம் உருவாக்கிடவும், ஈர் ஓடை சூழ்ந்த பொன்னி நதியின் ஓரம் அமைந்த இந்திய திருநாட்டில்; தமிழகத்தில் உள்ள ஈரோடு மாநகரில் இளைய தலைமுறையினர் முடிவு செய்து 05-10-1975ஆம் ஆண்டு கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. சங்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்து உறுப்பினர்கள் எண்ணிக்கை 104 ஆகும்.

இச்சங்கத்தை நிர்வகிக்க மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஏழு நிர்வாகிகள் மற்றும் 20 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு பெற்று சங்கத்தை திறம்பட நிர்வாகித்து வருகிறார்கள். இச்சங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளை சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளை சங்கத்தின் தலைவரும், செயலாளரும் கவனித்து வருகிறார்கள். சங்கத்தில் நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் லாபம் என்றவகையில் சங்கத்தில் இருந்து எவ்வித பிரதி பலன் எதிர்பார்க்கமால் தன்னலமற்ற முறையில் சேவையினை இரவு பகல் பாராது கொங்கு சமுதாயத்திற்கு செய்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆகும

கொங்கு சித்த மருத்துவ மையம் செயல்பாடுகள்

கொங்கு சமுதாயம் மற்றும் பொதுமக்களுக்கு சேவை நோக்கத்தோடு 13-07-1997ம் ஆண்டு கொங்கு சித்த மருத்துவ மையம் ஆரம்பிக்கப்பட்டது. தலைசிறந்த சித்த மருத்துவர் ஒருவரை பணிக்கு அமர்த்தி அன்று முதல் இன்று வரை இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் அனைத்து விதமான நோய்கள் கண்டறியப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 75,000-மேல் நோயாளிகள் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். கொங்கு சித்த மருத்துவ மையம் தொடர்ந்து பொதுமக்களுக்கு சீரிய சேவையினை செய்து வருகிறது.

மூலிகை கண்காட்சி

கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம் மற்றும் கொங்கு சித்த மருத்துவ மையம் சார்பில் வருடந்தோறும் மாபெரும் மூலிகை கண்காட்சி நடைபெற்று வருகிறது. மூலிகை கண்காட்சியில் நூற்றுக்கணக்கான அரிய பல வகை மூலிகை செடிகள் அதன் பயன்கள் பற்றிய குறிப்புகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

இயற்கையான பல வகைகள், காய்கறிகள் அவற்றின் பயன்கள், மருத்துவ குணங்கள் மற்றும் நோய் தீர்க்கும் குறிப்புகள் வைக்கப்படுகின்றன. பொதுமக்கள் மற்றும் தாவரவியல் பயிலும் மாணவ மாணவியர்களிடையே பெருத்த வரவேற்பு கிடைக்கப் பெற்று வருகிறது. தொடர்ந்து இந்தச் சேவை வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.

இலவச மருத்துவ உதவிகள்

கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம் சார்பில் வருடந்தோறும் கொங்கு சமுதாய மக்களுக்கு சர்க்கரை வியாதி, இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, காது கேளாதோர் சிகிச்சை போன்ற சிகிச்சைகளுக்கு வருடந்தோறும் குறைந்த பட்சம் ரூபாய் 50,000-க்கு மேல் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள்

கொங்கு வேளாளர் இளைஞர் சங்;கம் சார்பில் 1990ம் ஆண்டு முதல் வருடந்தோறும் இலவசமாக ஆங்கில முறை பொது மருத்துவ முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், இரத்ததான முகாம்கள், சித்த மருத்துவ முகாம்கள் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. கொங்கு சமுதாயம் மற்றும் பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கில் பயன்பட்டு வருகிறார்கள்.

கல்வி நிதி உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்

கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம் ஆரம்ப கால 1990ம் ஆண்டு முதல் கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த சிறந்த முறையில் கல்வி பயின்று வரும் வசதியற்ற ஏழை மாணவ மாணவியர்களுக்கு அவர்கள் மேற்கொண்டு கல்வி பயில வருடந்தோறும் ரூ.2,00,000 (இரண்டு லட்சம்) வரை வழங்கப்பட்டு வருகிறது.

வருடந்தோறும் சங்கம் சார்பில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு பயிலும் வசதியற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக ரூ.50,000க்கு மேல் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அரசு உயர்பணி IAS., IFS., IPS., I.F.S. பயில பயிற்சி முகாம்கள் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. வருடந்தோறும் சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம், தொழில் முனைவோர் கருத்தரங்கம், விவசாய கருத்தரங்கம், மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வழி காட்டும் கருத்தரங்கம் போன்றவைகள் நடத்தப்பட்டு வருகிறது.

கொங்கு சாதனையாளர்கள் பாராட்டு விருது

கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம் சார்பில் சமுதாயத்திற்கு சாதனை செய்து வரும் தலைசிறந்த வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், நூல் ஆசிரியர்கள், விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் பெண்மணிகளுக்கும் அவர்கள் சாதனைகளை பாராட்டி வருடந்தோறும் சாதனையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

இலவச திருமணம் நிகழ்வு

கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம் சார்பில் 2000ம் ஆண்டு முதல் அனைத்து சமுதாயத்தினருக்கும் இலவச திருமண விழா நடத்தி வைக்கப்படுகிறது.

கொங்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்

நமது சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் மகளிர்கள் வேலை வேண்டி விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு தமிழகத்தில் உள்ள பிரபல நிறுவனங்களில் தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு பற்றிய விபரங்கள் பெறப்பட்டு வேலைவாய்ப்பு கிடைக்க ஆவணம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான இளைஞர் மற்றும் மகளிர்கள் பயனடைந்து வருகிறார்கள். வருடந்தோறும் வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நிகழ்வு கொங்கு கலையரங்கில் நடைபெற்று வருகிறது.

இரத்த தானம் வழங்குதல்

சங்க உறுப்பினர்கள் அனைவரும் 08-12-1991 முதல் அரசு பொது மருத்துவமனையில் வருடந்தோறும் இரத்ததானம் செய்து வருகிறார்கள். பொதுமக்கள் மற்றும் சமுதாய மக்கள் தங்கள் அவசர காலத்தில் இரத்தம் தேவைப்படும் பொழுது சங்கத்தை அணுகி வருகிறார்கள். எங்கள் சங்க உறுப்பினர்கள் இரவு பகல் பாராது இரத்ததானம் செய்து வருகிறார்கள். இந்தச் சேவையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து சமுதாய வளர்ச்சி, பொதுமக்கள் சேவை ஆகியவற்றை சிறப்பான முறையில் செய்து வருகின்ற காரணத்தினால் தமிழகத்தில் உள்ள சங்கங்களில் முதன்மையான சங்கமாக விளங்கி வருகிறது.

தொடர்ந்து எங்கள் சங்கத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள எங்களது இணையதளத்தின் News/Events சென்று பாருங்கள்.

மீண்டும் சந்திப்போம் இணைய தளம் மூலம்.

Copyright © Kongumarriage.com